இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரி திருவனந்தபுரம் திரு. அசோக் குமார். எஸ் அவர்கள்

Ashok Kumar. S

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரி திருவனந்தபுரம் திரு. அசோக் குமார். எஸ் அவர்கள் மற்றும் நான்கு சக விஞ்ஞானிகளுடன் இணைந்து “சாக்கெட்டுகளில் இருந்து இணைப்பான் பிளக்குகளை துண்டிப்பதற்கான ஒரு சாதனம்” கண்டுபிடித்தார்கள், அதற்க்கு இந்திய அரசாங்கத்தால் பதிப்புரிமைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

திரு. அசோக் குமார் அவர்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் மேலும் திருவனந்தபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் செயலாளரும் ஆவார். அவருடைய சாதனை நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

கி.கிருஷ்ணமூர்த்தி

தொகுப்பு:

Shanmugaraj got President award

B/o Krishnamoorthy, Patron

AK24MTCS

கழுகுப் பார்வை கொண்ட உளவுத்துறை அதிகாரி குடியரசுத் தலைவரின் பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற விவரம் தினசரி செய்தி தாள்களில் வெளிவந்தன அவர்தான் Directorate of Revenue Intelligence, Coimbatore Regional Unit and Central Excise and Customs தொடர்பான பல்வேறு பணிகளில் 33 ஆண்டுகாலம் சிறப்பாக பணிபுரிந்து சிறப்பான செயல்பாடுகளை வழங்கி Senior Intelligence Officer ஆக ஒய்வு பெற்ற திரு. NTPA. சண்முகராஜ் அவர்கள்.

இவர் நம் சமூகத்தின் அடையாளமாக, திகழ்ந்த ஒருவரும், ஆன்மீகம்- சமூகம், நம் இனம் கல்வி, விழையாட்டு ஆகியவற்றில் அதிகபட்ச ஈடுபாடு கொண்டவருமான,தெய்வத்திரு. NTP ஆறுமுகம் செட்டியார் அவர்களின் குமாரர் என்பதும், சுண்டக்காமுத்தூரில் ஒரு தெருவின் பெயர் NTP வீதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

   அவரது நேர்மை, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவு போன்ற நற்குணங்களையும், அவரது சிறப்பான பணியையும் பாராட்டி மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் 2020-ல் சிறப்பான சேவைப் பதிவுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். சுண்டக்காமுத்தூரை சேர்ந்த இவர், 

தற்பொழுது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மகாஜன சங்கம் தலைவராக சேவை செய்து வருகிறார். இவருக்கு கிடைத்த விருது நம் இனத்திற்கும் நம் நாட்டிற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

தொகுப்பு: கி.கிருஷ்ணமூர்த்தி