


















Article covered by Malayalam Newspapers about the event

Malayala Manorama Daily DT 12.11.2024

Mathrubhumi Daily dt 13.11.2024
செய்திக்குறிப்பு
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் தத்தமங்கலம் சுந்தரம் மடத்தில் வைத்து குடும்ப சங்கமம் விழா, சங்கம் ஆண்டு பொதுக்கூட்டம், கல்வி பரிசளிப்பு விழா, முதியோர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இனிதே நடைபெற்றது.
திருமதி ருக்மிணி கிருஷ்ணமூர்த்தியின் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்னோர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமை சங்கம் இணை செயலாளர் மற்றும் கிளை சங்கம் செயலாளர் திரு எ.ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். தத்தமங்கலம் கிளை சங்கம் தலைவர் திரு பி.பாபு தலைமை தாங்கினார். ஆல் கேரளா 24 மனை தெலுங்கு செட்டி சங்கம் மாநில தலைவர் திரு கி.கிருஷ்ணமூர்த்தி விழாவினை துவக்கி வைத்து பேசினார்.
செயலாளர் திரு ராஜமாணிக்கம் சங்கம் செயல்ப்பாடு அறிக்கை வாசிக்கப்பட்டு, வருமானம் மற்றும் செலவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பிறகு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருவாளர்கள் எஸ்.தினேஷ், கி.சபரிகிரீசன், பி.ராஜசேகரன், வி.ராஜேந்திரன், எஸ்.சுப்பிரமணியன் செட்டியார், மற்றும் திருமதி கி.சிவகாமி முதலியோர்கள் பேசினார்கள்.
செயற்குழு உறுப்பினர் திரு ஆர். சிவானந்த் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிய தெரிவித்ததுடன் விழா இனிதே நிறைவுற்றது.
செய்தித் தொகுப்பு : திரு.எ.ராஜமாணிக்கம்,செயலாளர்,தத்தமங்கலம்